சட்டப்பேரவை கூட்டத் தொடர் 20ஆம் தேதியுடன் நிறைவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சட்டப்பேரவை கூட்டத் தொடர்  20ஆம் தேதியுடன் நிறைவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இதனிடையே வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி நிறைவடைகிறது. 

இந்நிலையில், தேர்தல் வருவதால் பேரவைக் கூட்டத்தை முன்கூட்டியே முடிக்கலாமா? என்பது குறித்து இன்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP