தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறார் குப்புராமு?! அன்றே சொன்னது நியூஸ் டிஎம்!

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறார் குப்புராமு?! அன்றே சொன்னது நியூஸ் டிஎம்!
 | 

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறார் குப்புராமு?! அன்றே சொன்னது நியூஸ் டிஎம்!

தமிழக பாஜக தலைவராக து. குப்புராமு தேர்வு செய்யப்பட இருப்பதாக கிட்டத்தட்ட தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. இதை அன்றே நியூஸ் டிஎம் வாசகர்களிடம்l நாம் சொல்லியிருந்தோம். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை விலகினார். 

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறார் குப்புராமு?! அன்றே சொன்னது நியூஸ் டிஎம்!

இதையடுத்து காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பரிசீலனையில் இருந்தனர். பாஜக தலைவராக ரஜினிகாந்த் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வதந்திகள் வெளியானது. அந்த சமயத்திலேயே நம் நியூஸ் டி.எம். வாசகர்களிடத்தில்  திரு. குப்புராமு பாஜக தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நாம் சொல்லியிருந்தோம்.

மேலும் டெல்லியில் தமாகா தலைவர் ஜி கே வாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதனால் தனது தமாகாவை பாஜகவுடன் இணைத்து விட்டு தமிழக பாஜக தலைவராகிறார் வாசன் என்றும் செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், திரு.குப்புராமு பாஜக தலைவராக இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP