என்னையும் கொன்று விடுங்கள்! கதறியழும் கர்ப்பிணி மனைவி! என்கவுண்டர் சம்பவம் எதிரொலி!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில், கைதான நான்கு பேரும் இன்று அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல பட்டதற்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையே பரவலான வரவேற்பு இருந்து வருகிறது.
 | 

பொதுமக்களும், அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் போலீசாரின் இந்த என்கவுண்டருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தாலும் மனித உரிமை ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் நால்வரில் ஒருவனான சின்னகேசவலு என்பவனின் மனைவி, இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து பேசுகையில்,  "எங்களுக்கு திருமணமாகி ஒருவருடம் தான் ஆகிறது. நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். திருமணமான ஒரு ஆண்டுக்குள் என் கணவர் என்னை விட்டு போய்விட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட  அந்த இடத்துக்கே என்னையும் அழைத்து சென்று கொலை செய்து விடுங்கள். அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது " என கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP