கேரளா பந்த்: தமிழக பேருந்துகள் நிறுத்தம்: பயணிகளுக்கு பாதிப்பு

சபரிமலைக்குள் முறைகேடாக நேற்று இரு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெறும் கடையடைப்பு போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

கேரளா பந்த்: தமிழக பேருந்துகள் நிறுத்தம்: பயணிகளுக்கு பாதிப்பு

சபரிமலை சன்னிதானத்துகள் முறைகேடாக இரு பெண்கள் நேற்று சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். 

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு முறைகேடான முறையில் நேற்று இரு பெண்கள்  சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து இயக்கங்கள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக நெல்லை, கோவை, மதுரையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 18 பேருந்துகளும், தனியார் சார்பில் இயக்கப்படும் 9 பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.

பாதுகாப்பு கருதி 27 பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கேரளா செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP