ஐ.பி.எல் வழக்கில் கருணாஸுக்கு அக். 4 வரை நீதிமன்றக்காவல்!

ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காவல்துறை மற்றும் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ளார்.
 | 

ஐ.பி.எல் வழக்கில் கருணாஸுக்கு அக். 4 வரை நீதிமன்றக்காவல்!

ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முக்குலத்தோர் புலிப்படை இயக்கத் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, காவல்துறை அனுமதி கோரிய நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. 

இதைத் தொடர்ந்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP