கருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

கலைஞர் கருணாநிதியின் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 | 

கருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

கலைஞர் கருணாநிதியின் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை திறக்கப்படுகிறது. 

இந்தவிழாவில் கலந்துகொள்ள திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்கு கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP