கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்கக்கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க மாட்டார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 | 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து அதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், ஆளுநர் அனுமதியோடு, சிறப்பு கூட்டம் கூட்டி அதில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் அளித்ததை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரம் குறித்து மிக நன்றாக தெரியும். அவரும் ஒரு விவசாயி. அதனால், விவசாயிகளில் வாழ்க்கையில் ஒளியேற்றுகிற வகையில் காவிரி நீரை பெற்றுத்தருவதில் முதல்வர் வெற்றி பெற்றார். அதேபோன்று, மேகதாது  அணை கட்டாமல் தடுத்து நிச்சயமாக வெற்றி பெறுவார். அணை கட்டுவதில் ஒரு செங்கலைக் கூட வைப்பதற்கு அனுமதிக்க மாட்டார்.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று சட்ட ரீதியாக அவர் நடவடிக்கை எடுப்பார்" என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP