கார்கில் வெற்றி தினம்: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண் பேடி மரியாதை!

கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
 | 

1999 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்து இந்திய பகுதியை கைப்பற்றியது. இந்தப் போரின் வெற்றிக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் போரில் உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,  அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் அதிகாரிகள் பலர் புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP