கன்னியாகுமரி: வாக்காளர் பட்டியலில் 1,000 மீனவர்கள் பெயர்கள் இல்லை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர், இனயம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏராளமானோர் பெயர் வக்காளர் பட்டியலில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கன்னியாகுமரி: வாக்காளர் பட்டியலில் 1,000 மீனவர்கள் பெயர்கள் இல்லை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர், இனயம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏராளமானோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. 

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று வாக்களிக்கச் சென்ற மீனவர்கள் பலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதம் செய்ததுடன் தற்போது ;வாக்குச்சாவடி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP