கன்னியாகுமரி: காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கன்னியாகுமரி கோதையாறு மின்உற்பத்தி நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 | 

கன்னியாகுமரி: காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கன்னியாகுமரி கோதையாறு மின்உற்பத்தி நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த அஜின்ராஜ் என்பவர், மணிமுத்தாறு ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். கோதையாறு மின்உற்பத்தி மைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுருந்தபோது, அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். 9வது பட்டாலியனை சேர்ந்த அஜின் ராஜ், 21 நாட்கள் விடுமுறைக்கு பின் சில தினங்களுக்கு முன் தான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதைதொடர்ந்து, காவலர் தற்கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கோதையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP