கமலை புறக்கணிக்க வேண்டும்: ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

ஒவ்வொரு இந்துவும் கமல் ஹாசனை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
 | 

கமலை புறக்கணிக்க வேண்டும்: ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

ஒவ்வொரு இந்துவும் கமல் ஹாசனை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "கமல்ஹாசன் மட்டுமன்றி, அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளது. கிறிஸ்தவ மதத்தை ஆதரிப்பதாக கமலே முன்பு ஒருமுறை ஊடகத்தில் பேட்டியளித்த போது கூறியுள்ளார்.

அரவது சகோதரர் சந்திரஹாசன் 2017ஆம் ஆண்டு லண்டனில் உயிரிழந்த போது, கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்.  கமலஹாசனின் சகோதரி மகன் பாஸ்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே, ஒவ்வொரு இந்துவும் இதனை கவனத்தில் கொண்டு, கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு பின்னால் கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது" என்று பேசியுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு பேசியதற்கு கமல்ஹாசன் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கவேண்டும் என ஹெச்.ராஜா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP