மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்!

காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
 | 

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்!

காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார். 

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தின் போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரி செய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது.  காலில் பொருத்தப்பட்ட டைட்டேனியம் கம்பி கடந்த 22ஆம் தேதி  அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டது. இதை தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனையின் படி ஓய்வில் இருந்த கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP