வைகையில்  இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர்  தரிசனம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை லட்சக்கணக்கானோர் இன்று பக்திபரவசத்துடன் கண்டு களித்தனர்.
 | 

வைகையில்  இறங்கிய கள்ளழகர் : லட்சக்கணக்கானோர்  தரிசனம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை லட்சக்கணக்கானோர் இன்று பக்திபரவசத்துடன் கண்டு களித்தனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை 5.45 மணிக்கு நடைபெற்றது.

பச்சைப்பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை, "கோவிந்தா, கோவிந்தா" என்ற கோஷங்கள் முழங்க லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

சித்திரை திருவிழா கடந்த 8 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 -ஆம் தேதி  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

newtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP