கஜா புயல் எதிரொலி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை!

கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 | 

கஜா புயல் எதிரொலி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை!

கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள டெல்டா மாவட்ட மக்கள், வழக்கமான நடைமுறைக்கு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுடன் இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகளும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. 

பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. மாணவர்களிடம் படிப்பதற்கு புத்தகங்கள் கூட இல்லாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. 

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருகிற 2019 மே 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள். ஆனால் கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாணவர்கள் பலர் தங்கள் கல்வி சான்றிதழ்களை கூட இழந்துள்ளதால் அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சார்பாக கல்வியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மத்திய அரசு இது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP