மெர்சலுக்கு தமிழிசை, சர்க்காருக்கு கடம்பூர் ராஜூ!- புகழேந்தி கிண்டல்

பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை, விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு விமர்சனம் செய்தை போல அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது வெளிவந்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தருகிறார் என புகழேந்தி கூறினார்
 | 

மெர்சலுக்கு தமிழிசை, சர்க்காருக்கு கடம்பூர் ராஜூ!- புகழேந்தி கிண்டல்

பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை, விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு விமர்சனம் செய்தை போல அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது வெளிவந்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தருகிறார் என கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அமமுக செயலாளருமான புகழேந்தி, “சசிகலா விரைவில், சிறைவாசத்தில் இருந்து வெளியே வருவார். அவர் வெளிவந்தவுடன் அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். கர்நாடகா இடைத்தேர்தல்களில் பஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பிரதிபலிக்கும். பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை, விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு விமர்சனம் செய்தை போல அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது வெளிவந்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தருகிறார். 20 தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதிக்கும் தமிழகத்தில் தேர்தல் நடந்தால் அதிமுக 8 தொகுதி அல்ல ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது” என்று கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP