அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சனம் செய்ய உரிமையில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சனம் செய்ய அதிமுகவினரை தவிர யாருக்கும் உரிமையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சனம் செய்ய உரிமையில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சனம் செய்ய அதிமுகவினரை தவிர யாருக்கும் உரிமையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஊராட்சி ஒன்றியம் இலந்தப்பட்டி கிராமத்தில், பகுதி நேர நியாய விலைக் கடையினை துவக்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் அமைச்சர் கடம்பூர் ராஜு. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட்டணி கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. ஜெயலலிதாவின் வழியில் தான் இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி முடிவு எடுக்க வேண்டியது. இதில் மற்றவர்கள் கருத்து சொல்லக்கூடாது. வைகோ, திமுகவை பற்றி அவ்வளவு இழிவாக பேசிவிட்டு இன்று கூட்டணி வைத்துள்ளார். இதைப்பற்றியெல்லாம் நாங்கள் விமர்சனம் செய்தோமா? அது அவர்களின் நிலைப்பாடு, விருப்பம்.

நாங்கள் அமைத்து இருப்பது கொள்கை கூட்டணி. அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சனம் செய்ய அதிமுகவினருக்கு உரிமை உண்டு தவிர மற்றவர்கள் இந்த கூட்டணியை விமர்சிக்க உரிமையில்லை" என்று தெரிவித்தார். 

newstm,in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP