நீதிமன்ற காலி பணியாளர் பணியிடங்களை நிரப்புமாறு நீதித்துறை ஊழியர் சங்கம் கோரிக்கை!!

நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 | 

நீதிமன்ற காலி பணியாளர் பணியிடங்களை நிரப்புமாறு நீதித்துறை ஊழியர் சங்கம் கோரிக்கை!!

நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சேலம் சி.ஐ.டி.யு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ப. இராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் வட்டைகளை தலைவர் கா. கலியபெருமாள் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் ராஜி மாவட்ட பொருளாளர் இரா.காந்திமணி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் அறிக்கை சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி. முருகப்பெருமாள் மாவட்ட செயலாளர் சுரேஷ் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் இளநிலை கட்டளை நிறைவேற்றினர்.

இந்நிகழ்ச்சியில், நீதிமன்ற பணிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்றும், சேலம் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை 300க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அந்த பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், விடுமுறை தினங்களில் நீதித்துறை ஊழியர்களுக்கு கட்டாய பணி வழங்கக்கூடாது, மாலை 6 மணிக்கு மேல் எந்த பணியும் வழங்கக் கூடாது, அதிலும் குறிப்பாக இரவு 8 மணி வரை பெண்களுக்கு பணி வழங்கக் கூடாது என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP