சேலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

அரசாணை 17 பி- யை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

சேலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

அரசாணை 17 பி- யை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு முடிவின் அடிப்படையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கல்வி மாவட்டங்களிலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், சங்ககிரி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகப்பெருமாள் தலைமை தாங்கினார். இதில், கல்வித்துறையில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சீரழிக்கும் அரசாணை 145, 100,101, அரசாணைகள் ரத்து செய்யப்படவேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

குறிப்பாக அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் அவர்களின் மீது பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.  தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களை தொடர்ச்சியாக பணிமாறுதல் செய்வதை தடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், சந்திரசேகர் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP