இந்த வயதில் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் 

ஆந்திர அரசியலில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ரோஜா, தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ண படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 | 

இந்த வயதில் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் 

ஆந்திர அரசியலில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ரோஜா, தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ண படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் செம்பருத்தி திரைப்படத்தின் மூலம், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரோஜா. அதன் பிறகு, 90களில் தெலுங்கு, தமிழ் என திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

பின்னர், தன்னை அறிமுகப்படுத்தி வைத்த ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு, ஆந்திர அரசியலில் அடியெடுத்து வைத்து, தற்போது ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

இந்த நிலையில், நடிகை ரோஜா, நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், ரோஜா இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் என்பதால், இந்த அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP