ஜெ.3ம் நினைவு தினம்! களை கட்டும் நினைவிடம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜெ.3ம் நினைவு தினம்! களை கட்டும் நினைவிடம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மக்களின் நீங்கா நினைவில் இடம்பிடித்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் கண்கவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் காலை சுமார் 9.30 மணிக்கு அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள். அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இதேபோல் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP