ஜெ. நினைவுநாள் முடிந்தாலும் கட்டுப்பாடுகள் தொடரும்- ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதா பற்றிய சர்ச்சைக்குரிய சிறப்பு கருத்துகளையோ, தொடரையோ, செய்திகளையோ வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று அதிரடியாக ஆணையை பிறப்பித்தது. அந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று தற்போது தெரிவித்துள்ளது.
 | 

ஜெ. நினைவுநாள் முடிந்தாலும் கட்டுப்பாடுகள் தொடரும்- ஆணையம் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் நினைவு நாளையொட்டி ஜெயலலிதா பற்றிய சர்ச்சைக்குரிய சிறப்பு கருத்துகளையோ, தொடரையோ, செய்திகளையோ வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று அதிரடியாக ஆணையை பிறப்பித்தது. அந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று தற்போது தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா நினைவுநாளையொட்டி செய்திகளுக்கு கட்டுப்பாடு விதித்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அனைத்து ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பொது சுற்றறிக்கை அனுப்பியது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் செய்தியோ அல்லது காட்சிகளையோ வெளியிடக்கூடாது. ஜெ. மரணம் தொடர்பான செய்திகளையோ, சர்ச்சைக்குரிய தொடர்களையோ அனுமதியின்றி வெளியுடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முன் அனுமதியின்றி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எச்சரித்திருந்தது. அதேபோன்று ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாகவோ, ஜெயலலிதா மரணம் தொடர்பாகவோ சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என்ற கட்டுப்பாடு தொடரும் என்றும்,  ஜெ. மரணம் தொடர்பான செய்திகளை அனுமதியின்றி வெளியிடக்கூடாது மீறி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP