ஜெ மரணம்; சிசிடிவி வீடியோக்கள் எங்கே? - ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனையிடம், ஜெயலலிதா தொடர்பான அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் சமர்ப்பிக்க 7 நாட்கள் கால அவகாசம் விதித்துள்ளது.
 | 

ஜெ மரணம்; சிசிடிவி வீடியோக்கள் எங்கே? - ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனையிடம், ஜெயலலிதா தொடர்பான அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் சமர்ப்பிக்க 7 நாட்கள் கால அவகாசம் விதித்துள்ளது. 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பல முக்கிய புள்ளிகளை விசாரித்து வரும் ஆணையம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக உத்தரவிட்டது. யாரும் ஆஜராகாத நிலையில், நேற்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு கண்டனம் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பற்றி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில், மருத்துவமனையில் இருந்த பல சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்தவரை உள்ள அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் தங்களிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. 7 நாட்கள் கால அவகாசம் அப்போலோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்களை அணைத்து வைக்க உத்தரவிட்டது யார் என்றும், அப்போலோ மருத்துவமனையிடம் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP