ஜெ. பிறந்தநாள்: 71 லட்சம் மரக்கன்று நடும் விழா! முதல்வர் தொடங்கி வைத்தார்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 -வது பிறந்தநாளை முன்னிட்டு, 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை சென்னை மெரினாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 | 

ஜெயலலிதாவின் 71 -வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். 

பின்னர் 71 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தாள் கொண்டாடப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் இணைந்து கேக் வெட்டினர். 

அதன் தொடர்ச்சியாக, அவரது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கி உள்ளது. சென்னை மெரினாவில் பாரதிதாசன் சாலை அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் மரக்கன்றை நட்டு விழாவை தொடக்கி வைத்தார். தொடர்ந்து 71 லட்சம் மரக்கன்றுகள் நடவுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP