பிரதமரை அனுமதிக்கமாட்டோம் என சொல்வதற்கு திமுகவிற்கு அருகதையில்லை: பொன். ராதாகிருஷ்ணன் 

மேகதாது அணைக்கட்ட அனுமதி அளித்தால் பிரதமரை தமிழகத்தினுள் அனுமதிக்கமாட்டோம் என ஸ்டாலின் கூறுகிறார். பிரதமரை அனுமதிக்கமாட்டோம் என சொல்வதற்கு யாருக்கும் அருகதையில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமரை அனுமதிக்கமாட்டோம் என சொல்வதற்கு திமுகவிற்கு அருகதையில்லை: பொன். ராதாகிருஷ்ணன் 

மேகதாது அணைக்கட்ட அனுமதி அளித்தால் பிரதமரை தமிழகத்தினுள் அனுமதிக்கமாட்டோம் என ஸ்டாலின் கூறுகிறார். பிரதமரை தமிழகத்திற்கு அனுமதிக்கமாட்டோம் என சொல்வதற்கு யாருக்கும் அருகதையில்லை என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “மேகதாது விவகாரத்தை பொருத்த வரையில் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அணை கட்டுவது தொடர்பான ஆய்வு அறிக்கை தாக்கல் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. திமுக திட்டமிட்டு சில விஷயங்களில் ஈடுப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பங்குதாரர்கள் போல் திமுக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

50 வருடங்களாக தமிழர்களை சின்னாபின்னமாக்கிய கழகங்கள் குறித்து தமிழக மக்கள் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேகதாது அணைக்கட்ட அனுமதி அளித்தால் பிரதமரை தமிழகத்தினுள் அனுமதிக்கமாட்டோம் என ஸ்டாலின் கூறுகிறார். பிரதமரை தமிழகத்திற்கு அனுமதிக்கமாட்டோம் என சொல்வதற்கு யாருக்கும் அருகதையில்லை. காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டு தற்போது மேகதாது விஷயத்தில் நாடகமாடி வருகிறது. ரூ.1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்ற திமுக ம்ச்ற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழர்கள் பற்றி பேச அருகதை கிடையாது. இதுகுறித்து வைகோ, திருமாவளவன் போன்றவர்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்ககூடாது என்பதில் பாஜக உறுதியுடன் உள்ளது” என்று கூறினார். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP