மாற்று கருத்து கூறவும் உரிமை உள்ளது: கடம்பூர் ராஜூ

கருத்து சொல்ல உரிமை இருப்பது போன்று மாற்று கருத்து கூறவும் உரிமை உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

மாற்று கருத்து கூறவும் உரிமை உள்ளது: கடம்பூர் ராஜூ

கருத்து சொல்ல உரிமை இருப்பது போன்று மாற்று கருத்து கூறவும் உரிமை உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யாக கருத்து கூறியிருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து அதற்கு எதிர்கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.  இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருத்து சொல்ல உரிமை இருப்பது போல், அது தவறு என்றால் மாற்று கருத்து கூறவும் உரிமை உள்ளதாக தெரிவித்தார். 

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் கடந்த 8 ஆண்டுகளாக முதல்வர் நியமிக்கப்படாததால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து கேள்விக்கு, கல்லூரியில் முதல்வர் இல்லை என்ற நிலை இல்லை எனவும், பொறுப்பு முதல்வர் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் கடம்பூர் ரஜூ விளக்கமளித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP