தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: 6 காவலர்கள் பணியிட மாற்றம்

திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 சிறப்பு அதிரடி போலீசார் உட்பட 6 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
 | 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த மலையனூர் கிராமத்தை சேர்ந்த 40 பேர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று திருப்பதி சென்றனர். அலிபிரி சோதனைச்சாவடியில் அதிகாரிகள் சோதனையிட்ட போது, கன்னியப்பன்என்பவரிடம் இருந்த புகையிலையை கைப்பற்றி குப்பையில் வீசினர்.

இதனை கன்னியப்பன் எடுக்க முயன்றபோது, காவலர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற உறவினர்கள் மீதும் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர். 

இந்நிலையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக  4 சிறப்பு அதிரடி போலீசார் உட்பட 6 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP