Logo

நடுக்கடலில் இஸ்ரோ ராக்கெட்! விரைந்து சென்ற காவல்துறையினர்!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஒரு பெரிய உருளை போன்ற ஒரு பொருள் அவர்களின் வலையில் சிக்கியது. அவர்கள் அந்த உருளையை படகுகளில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர்
 | 

நடுக்கடலில் இஸ்ரோ ராக்கெட்! விரைந்து சென்ற காவல்துறையினர்!

நடுக்கடலில் இஸ்ரோ ராக்கெட்! விரைந்து சென்ற காவல்துறையினர்!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஒரு பெரிய உருளை போன்ற ஒரு பொருள் அவர்களின் வலையில் சிக்கியது. அவர்கள் அந்த உருளையை படகுகளில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அது ராக்கெட்டில் உள்ள ஒரு பாகம் என கண்டறிந்தனர். அதாவது ராக்கெட்டை மேலே ஏந்திச் செல்ல பொருத்தப்படும் 5 எரிபொருள் உருளைகளில் ஒன்று  என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உருளைகள் ராக்கெட்டை சில தூரம் மேலே கொண்டு சென்ற சில நேரங்களில் தானாகவே ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்து விடும். பின்பு இது குறித்த தகவல், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்டது.  அவர்கள் அது ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்த Strap on motor என தெரிவித்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP