ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..

எனது கணவருக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், நான் ஏமாந்து விட்டதாகவும் நடிகை ஜெயஸ்ரீ கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
 | 

ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..

ராஜா ராணி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல முன்னனி சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நடிகர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயஸ்ரீ, ஈஸ்வர் அவருக்கு செய்த கொடுமைகளை பற்றி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

அதில், " ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாகவும், மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன்னை விவாகரத்து செய்ய, ஈஸ்வர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில் மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக மற்றவர்கள் கூறிய போது நான் இல்லை அவர் நட்பாகதான் பழகுகிறார் என கூறினேன். மகாலட்சுமியும் திருமணமானவர் தான். அவரது குழந்தை ஈஸ்வரை அப்பா என அழைப்பதை கேட்டு கலங்கி போய் ஒருமுறை மகாலட்சுமியை காரில் சந்தித்து பேசினேன். அப்போது தனது கணவரை விட்டுவிடும்படி காலில் விழாதக் குறையாக அழுது கெஞ்சியதாக ஜெயஸ்ரீ கண்ணீருடன் கூறியுள்ளார். 

மேலும், தனது இந்த நிலைக்கு மகாலட்சுமியும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், மகாலட்சுமியுடன் தான் ஒன்றரை மணி நேரம் பேசியதை செல்போன் மூலம் கேட்ட ஈஸ்வர், பின்னர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார். ஈஸ்வரை தான் பெரிதும் நம்பியதாகவும், ஆனால் அவர் முன்பிருந்தே பெண்கள் விஷயத்தில் தவறானவர் என்பது பின்னரே தெரியவந்திருப்பதாகவும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். மகாலட்சுமி ஈஸ்வரிடம் நட்பாக பழகுவதாகவே கூறி வருவதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்ய ஈஸ்வர் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP