விமர்சனம் வைத்தால் கூட்டணி வைக்கக்கூடாது என்று இருக்கிறதா? - கொந்தளித்த அன்புமணி

அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பதிலளித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் -அன்புமணி இடையே காரசார விவாதமும் நடைபெற்றது.
 | 

விமர்சனம் வைத்தால் கூட்டணி வைக்கக்கூடாது என்று இருக்கிறதா? - கொந்தளித்த அன்புமணி

விமர்சனம் வைத்தால் கூட்டணி வைக்கக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? என்று அதிமுக- பாமக கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் கேள்வி எழுப்பினார். 

அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பதிலளித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் -அன்புமணி இடையே காரசார விவாதமும் நடைபெற்றது. 

அப்போது திமுக குறித்து பேசும் அன்புமணி பேசும் போது, "மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்ற விரக்தியினால் ஸ்டாலின் எங்கள் மீது விமர்சனம் வைத்து வருகிறார். ஏன்? தோல்வி பயத்தினாலும் ஸ்டாலின் பாமகவை விமர்சிக்கலாம்.

நாங்கள் இதுவரை ஆட்சியில் இருந்ததில்லை. எனவே கொள்கைகளை நிறைவேற்றவில்லை என்று எங்களிடம் கேட்க முடியாது. ஆட்சியில் இருந்தால்தானே கொள்கைகளை முறையாக நிறைவேற்ற முடியும். ஆனால், நான் தருமபுரி தொகுதி மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது கடமையை செய்துள்ளேன். அது அந்தப் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். தருமபுரியில் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று நான் மக்களிடம் பேசியுள்ளேன். 

விமர்சனம் வைத்தால் கூட்டணி வைக்கக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? விமர்சனம் செய்தவர்கள் யாரும் இதுவரை கூட்டணி வைத்ததில்லையா? காங்கிரஸ் கட்சி திமுக மீது விமர்சனம் செய்ததே இல்லையா? உ.பியில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி எப்படி உருவானது? எனவே அதிமுக- பாமக கூட்டணியும் அப்படி தான். எனவே எங்களது கூட்டணி குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP