கடலூரைச் சேர்ந்தவருக்கு நிபா வைரஸ் அறிகுறி?

கேரளாவில் பணிபுரிந்துவிட்டு கடலூர் திரும்பிய ராமலிங்கம் என்பவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கடலூரைச் சேர்ந்தவருக்கு நிபா வைரஸ் அறிகுறி?

கேரளாவில் பணிபுரிந்துவிட்டு கடலூர் திரும்பிய ராமலிங்கம் என்பவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்தநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கடுமையான காய்ச்சலால் ஏற்பட்ட நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு நிபா வைரஸ் தோற்று இருப்பதாக சந்தேகித்த மருத்துவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். 

அதன் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவமனையில் அவர் தனி பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் வெங்கடேசன் என்பவரது தலைமையில் மருத்துவக்குழு ஒன்று கடலூர் மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது. 

இதற்கிடையே, ராமலிங்கத்தின் ரத்த மாதிரிகள், புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா? என்பது தெரியவரும்.

தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறி இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்; எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP