ஆட்சிக்கு வரநினைப்பது ஊழல் செய்யத்தானே? - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக அவசரப்படுவது ஊழல் செய்து கொள்ளையடிக்கத்தானே? காவிரி மணலை சுரண்டி விற்றது கழக கண்மணிகள்தானே? என்று ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

ஆட்சிக்கு வரநினைப்பது ஊழல் செய்யத்தானே? - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக அவசரப்படுவது ஊழல் செய்து கொள்ளையடிக்கத்தானே? என்று ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில், மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற மே19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

ஆட்சிக்கு வரநினைப்பது ஊழல் செய்யத்தானே? - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

இதையொட்டி, இந்தத் தொகுதிகளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுவ வருகிறார். 

நேற்று அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது பேசிய ஸ்டாலின், "தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பேசினார். 

இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "கோவை பெருமாநல்லூரில் மின்சாரக்கட்டண உயர்வை குறைக்கவேண்டி போராடிய விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திமுக ஆட்சியின் திண்ணை நாடகம் ?ஆட்சிக்கு வரவேண்டி அவசரப்படுவது விஞ்ஞானபூர்வ ஊழல் கொள்ளையடிக்கத்தானே?காவிரி மணலை சுரண்டி விற்றது கழக கண்மணிகள்தானே?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP