முடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு?

அண்ணாதுரை காலத்தில் திமுக கூட்டணியில் தேர்தலுக்கு பிறகு கருத்து வேறுபாடுகள் தோன்றிய போது, தேன் நிலவு முடிந்துவிட்டது என்றார். புதிதாக ஒரு ஆட்சி பொறுப்பேற்றதும், சில மாதங்கள் யாரும் அதனை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அந்த ஆட்சிக்கு தேன் நிலவுக்காலம். இந்த அகராதிப்படி, திமுகவின் தேன் நிலவுக்காலம் முடிந்து விட்டதோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
 | 

முடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு?

அண்ணாதுரை காலத்தில் திமுக கூட்டணியில் தேர்தலுக்கு பிறகு கருத்து வேறுபாடுகள் தோன்றிய போது, தேன் நிலவு முடிந்துவிட்டது என்றார். புதிதாக ஒரு ஆட்சி பொறுப்பேற்றதும், சில மாதங்கள் யாரும் அதனை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அந்த ஆட்சிக்கு தேன் நிலவுக்காலம். இந்த அகராதிப்படி, திமுகவின் தேன் நிலவுக்காலம் முடிந்து விட்டதோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. 

கருணாநிதி மறைவுக்கு பின்னர் நடக்கும் தேர்தல் தோல்விகளின் நாயகனாக அறியப்பட்ட ஸ்டாலின் வெற்றி பெற வேண்டிய கட்டாயம். இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் 10 எம்.பி இடங்களை அன்பான மிரட்டல் மூலம் பெற்றது. இன்னொருபுறம் மதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்காது என்ற சூழ்நிலையை திமுக  ஏற்படுத்தியது. துரைமுருகன் வேறு கூட்டணியை உடைக்கும் வகையில் பட்டாசு ஒன்றை கொளுத்தி்ப்போட்டார்.  அதிர்ச்சியடைந்த அவர்கள் கெஞ்சி கூத்தாடி கடைசியாக கூட்டணி ரயிலில் கார்டு பெட்டியில் தொற்றிக் கொண்டார்கள்.

முடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு?

ஸ்டாலின் முயற்சி, கூட்டணியின் வலிமை, மோடி எதிர்ப்பு, அதிமுகவில் ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாதது. அதிமுகவில் நடந்த கடைசி நேர வெளிப்படையான வியாபாரம் போன்ற பல காரணங்களால் திமுக தேர்தல் நடந்த 39 இடங்களில் 38 இடங்களை பிடித்தது. வழக்கத்துக்கு மாறாக காங்கிரஸ் கட்சியினரும் ஒரு இடத்தை தவிர, மற்ற இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த சூழ்நிலை உள்ளாட்சி தேர்தல், அல்லது சட்டபைத் தேர்தல் வரை தொடர்ந்தால் எங்கள் கட்சி அம்போதான் என்ற அதிமுவினரின் எண்ணத்தை திமுக கூட்டணிக் கட்சிகள் துாள்துாளாக்கிவிட்டது. 

தேர்தல் முடிந்த சில காலத்திலேயே உதயநிதி உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். நாங்குநேரி இடைத்தேர்தலில்  திமுக தான் போட்டியிட வேண்டும் என்று கூட்டணியில் பட்டாசை கொளுத்தி போட்டார். அதற்கு ஒத்து ஊதுவது போல திமுக திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் நேருவும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடத்தில் தான் போட்டியிட வேண்டும்.  எத்தனைக்காலம் தான் திமுக பல்லக்கு துாக்குவது, மற்றவர்களை வெற்றி பெற வைத்து விட்டு திமுக காரன் வீதி ஒரத்தில் வாயில் குச்சி ஐஸ் வைத்துக் கொண்டா நிற்பான் என்று ஆடை கட்டிய ஆபாச வார்த்தைகளால் கேள்வி எழுப்பினார். 

முடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு?

இதே போல, காங்கிரஸ் கட்சியில் குரல் எழுப்பிய கராத்தே தியாகராஜன் கட்சியை விட்டே நீக்கி, காங்கிரஸ் தன் திமுக விஸ்வாசத்தை காட்டியது. இத்தோடு திமுக, காங்கிரஸ் ஊடல் முடிவுக்கு வந்தது. ஊடலின் 2ம் பாகம் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அரங்கேறியது. சிலையை திறக்க மம்தா வந்தது உறுதியானதும், கம்யூனிஸ்ட்கள் வேண்டாத விருந்தாளியாக மாற்றிவிட்டனர். அந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொண்டாலும், மேடையில் இடம் பெறவில்லை. இதன் மூலம் நாங்கள் போட்டதால் தான் நீங்கள் இன்றைக்கு பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைக்க முடிந்தது. எங்களை பொறுத்தளவில் நீங்கள் ஒட்டு தாடி தான் என்று திமுக மறைமுகமாக வெளிப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய சூழ்நிலையில், அவர்கள் வாய் மூடி மவுனமாக இருந்து விட்டனர். கூட்டணிக் கட்சியின் ஒரு சில பங்குதாரர்களை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் கழட்டி விடுவோம் என்று உணர்த்திவிட்ட தைரியத்தில் அடுத்த அம்பு காங்கிரஸ் நோக்கிவிட திமுக தயாராகிவிட்டது. இந்த முறை தான் நேரடியாக களம் இறங்காமல் வைகோவை இறக்கியது. 

முடிந்து விட்டதா திமுகவின் தேன் நிலவு?

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பான விவாதத்தில் வைகோ முழு பாஜக காரனாகவே மாறி காங்கிரஸ் கட்சியை வெளுத்து வாங்கினார். அவர் பேசியது அனைத்தும் உண்மை என்றால் கூட கூட்டணியில் இருந்த போதே அவர் பேசியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் கூட மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு பேசியது, ஸ்டாலின் இதுவரையில் அவரை கண்டித்து ஒரு அறிக்கை விடாதது போன்ற சம்பவங்கள் திமுக, காங்கிரஸ் கட்சியை கழற்றி விடப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய முழுமையான உண்மை வெளிப்பட இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இவ்வளவு இடங்களை பெற முடியாது என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை. அப்படி, திமுக கூட்டணி கலைந்தால் அதனை அதிமுக சாதகமாக மாற்ற தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP