சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இர்ஃபான் பதான் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இர்ஃபான் பதான் ஓய்வு!
 | 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இர்ஃபான் பதான் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இர்ஃபான் பதான், இந்திய அணிக்காக இதுவரையில் 29 டெஸ்டுகள், 120 ஒரு நாள் போட்டிகள், 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடைசியாக, 2012-ல் விளையாடினார். 

2006-ல் கராச்சி டெஸ்டில் இர்ஃபான் பதான் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகள் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இர்ஃபான் பதான் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 35 வயதான இர்ஃபான் பதான், தற்போது ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பொறுப்பில் உள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP