எதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி!

தான் பேசிய முழு வீடியோவை பார்த்த பின் என் மீது நடவடிக்கை எடுங்கள், நான் இறப்புக்காக பயந்து ஓட மாட்டேன். நான் செய்தது தவறு என்றால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என எம்.எல்.ஏ கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.
 | 

எதற்கும் பயந்து ஓட மாட்டேன்: நடிகர் கருணாஸ் பேட்டி!

தான் பேசிய முழு வீடியோவை பார்த்த பின் தன் மீது நடவடிக்கை எடுங்கள் என எம்.எல்.ஏ கருணாஸ் பேட்டியளித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் 16ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், காவல்துறையும் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார் கருணாஸ். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அ.தி.மு.க சார்பிலும், பொது நல அமைப்புகளும் வலியுறுத்தி சென்னை மாநகர் காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது.  

இதையடுத்து கருணாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், "நான் பேசிய முழு வீடியோவை பார்த்தால் என் மீது தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது என்பது தெரிந்துவிடும். 9 வருடங்களாக இந்த அமைப்பு நடத்தி வருகின்றேன். நான் இதுவரை மேடையில் ஒருமையில் கூட பேசியது இல்லை. அன்றைய தினம் பேசிவிட்டு வீட்டுக்கு சென்றவுடன், என் மனைவிடம் அன்று பேசியது குறித்து கூறி வருத்தப்பட்டேன். 

ஒரு அதிகாரி செய்கிற தவறை மற்றவர்கள் ஏன் ஊக்குவிக்கிறீர்கள். கூவத்தூர் விவாகரத்தில் நிறைய அரசியல் இருக்கிறது. அதுகுறித்து நான் நீதிபதியிடம் கூறிக்கொள்கிறேன். ஜனாதிபதியை நான் தான் தேர்வு செய்தேன் என்று கூறினால், நீங்கள் இல்லை என்பீர்களா?. அது போல தான் நான் முதல்வர் பற்றி பேசியது. 

முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.  ஜாதி ரீதியாக என் மீது தாக்குதல் நடத்தி சமுதாய பிரச்னையை உருவாக்க நினைக்கிறார்கள். எந்த சமுதாயத்திற்கும் எதிரான விஷயத்தையும் நான் ஏற்க மாட்டேன். எந்த சமுதாயம் குறித்தும் நான் இழிவாக பேசவில்லை. யார் யார் என்ன பேசுகிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். சிலர் போலீசார் முன்பே எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று நாம் பார்த்தோம். நான் இதுவரை எந்த காவல் நிலையத்திற்கும் சென்று கட்டபஞ்சாயத்து செய்தது இல்லை. நான் ஞாயிற்றுக்கிழமை பேசியது, புதன் கிழமை தான் வைரலாகிறது. நான் பேசியவற்றை கத்தரித்து சிலவற்றை மட்டும் பரப்பி வருகின்றனர். எனக்கு அனைவரும் பாதுகாப்பாக தான் இருக்கின்றனர். இறப்புக்காக பயந்து ஓட மாட்டேன். நான் செய்தது தவறு என்றால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP