திறனற்ற அரசு: கமல்ஹாசன் விமர்சனம்

சம்பளத்தை கூட போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியிருக்கும் திறனற்ற அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெற வேண்டும் என்கின்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசுக்கு, மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது’ என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்டிசி) தொழிலாளர்களுக்கு, ஜூன் மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து, தொழிலாளர்கள் இன்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று மாலையே ஊதியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP