குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது: லதா ரஜினிகாந்த்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தயா அமைப்பின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முயன்றுவருவதாக அவ்வமைப்பின் தலைவர் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தயா என்ற குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் தலைவர் லதா ரஜினிகாந்த் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது: லதா ரஜினிகாந்த்

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தைகளை பாதுகாப்பதற்காக குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஆரம்பித்துள்ளதாகவும், 32  மாவட்டங்களிலும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆர்வமுள்ள சமூக ஆர்வலர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என கேட்டுக்கொண்ட அவர், குழந்தைகளுக்கு  எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார். 

தற்போதைய காலகட்டத்தில் தனிதனியாக குடும்பங்கள் இருப்பதும், குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளதும் குற்றங்களுக்கு ஒரு காரணம் எனவும், சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.  

குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை 18001208866 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.peaceforchildren.net என்ற இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என குறிப்பிட்ட லதா ரஜினிகாந்த், பல தரப்பினருடன் இணைந்து குழந்தைகள் பிரச்னைகளை தீர்க்க முயன்று வருவதாக தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP