பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் அதிகரிப்பு: அமைச்சர் அறிவிப்பு 

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டரை மணி நேரமாக இருந்த தேர்வு நேரம் தற்போது 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP