நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஒப்புக்கொண்டனர்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில், மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

தேனியில் சிபிசிஐடி நடத்திய விசாரணையில், இருவரும் ஆள்மாறாட்டம் செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், விசாரணைக்கு பின் மாணவர் உதித்சூர்யா தந்தை வெங்கடேசனை சிபிசிஐடி கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் தேனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், ஆள்மாறாட்டம் செய்ய உதவிய தரகர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உதித் சூர்யா, தந்தை வெங்கடேசன் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP