வேலைநிறுத்தத்தை கைவிடவில்லை என்றால் வேலையை கைவிட வேண்டியதுதான்!

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடவில்லை என்றால் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
 | 

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்களின் பணி இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படுவது உறுதி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், கொடுத்த காலக்கெடுவுக்குள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர், காலி பணியிடங்களில் புதிதாக மருத்துவர்களை நியமிக்கும் பணி இன்றே தொடங்கும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP