குடிநீர் பஞ்சம் இல்லையெனில் ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது?: கார்த்தி சிதம்பரம்

தண்ணீர் பஞ்சம் இல்லை என்று கூறினால் ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 | 

குடிநீர் பஞ்சம் இல்லையெனில் ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது?: கார்த்தி சிதம்பரம்

தண்ணீர் பஞ்சம் இல்லை என்று கூறினால் ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது என எம்.பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மதுரை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், "தமிழ்நாட்டில் நீட் தேவையில்லை என்ற நிலையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தெளிவாக உள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வு கொண்டு வர காரணமான கட்சி எது என ஆராய்ச்சி செய்வது முக்கியம் அல்ல எனவும், நீட் தேர்வை நீக்குவது தான் முக்கியம் எனவும் தெரிவித்தார். 

தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர்கள், முதலமைச்சர் கூறிய நிலையில், ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் பெரிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் காவிரி -வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  

தொடர்ந்து பேசிய கே.எஸ் அழகிரி, " நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 4 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்களும் மெரிட்டில் தேர்வாகவில்லை எனவும் கூறினார். சமூகத்தில் பெரும்பான்மையான மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் பயன்படாத நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP