நாய்க்கு புலி வேஷம் போட்ட விவசாயியின் பலே ஐடியா! 

கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில், நலுரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், தங்களது வயல்களில் காபி மற்றும் பாக்கு பயிரிட்டு வந்தனர்.
 | 

நாய்க்கு புலி வேஷம் போட்ட விவசாயியின் பலே ஐடியா! 

கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில், நலுரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், தங்களது வயல்களில் காபி மற்றும் பாக்கு பயிரிட்டு வந்தனர். அந்த பகுதியில், குரங்குகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் அவை பயிர்களை நாசம் செய்தன. இதனையடுத்து, அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் கவுடா என்ற விவசாயி, தனது நாய் உடலில் புலி போல் வர்ணம் அடித்துள்ளார். புலி போல் மாறிய நாயை கண்ட குரங்குகள் ஓடுவதால் தற்போது தனது பயிர்கள் நாசமாவதில்லை என ஸ்ரீகாந்த் கவுடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனை பார்த்த மற்ற விவசாயிகளும் இந்த திட்டத்தை பின்பற்ற துவங்கியுள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP