காய்ச்சல் வந்துள்ள முக்கொம்பு அணையை பார்வையிட்டேன்: ஸ்டாலின் கிண்டல்!

காய்ச்சல் வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை பார்வையிட்டேன், “கோமா” நிலையில் இருந்துவரும் அ.தி.மு.க அரசு இதனை விரைந்து சரிசெய்ய வலியுறுத்துகிறேன் என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

காய்ச்சல் வந்துள்ள முக்கொம்பு அணையை பார்வையிட்டேன்: ஸ்டாலின் கிண்டல்!

காய்ச்சல் வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை பார்வையிட்டேன் என ஸ்டாலின் கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

திருச்சி முக்கொம்பு அணையில் ஏற்பட்டுள்ள சேதத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திருச்சி சிவா எம்.பி உள்ளிட்டோர் இருந்தனர். ஆய்வு செய்த பின்னர், 'முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமலேயே அதிகமான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் மதகு உடைந்துள்ளது. முன் கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து துரிதமாக செயல்பட்டு இருந்தால் இந்த பிரச்னை நிகழ்ந்திருக்காது. எடப்பாடி அரசு கோமாவில் உள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்' என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

காய்ச்சல் வந்துள்ள முக்கொம்பு அணையை பார்வையிட்டேன்: ஸ்டாலின் கிண்டல்!

இதைத்தொடர்ந்து ஆய்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகியும், இன்னும் தண்ணீர் வந்து சேராத கடைமடை விவசாயிகளை சந்தித்தேன். அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரைக்கும் கமிஷனை தூர்வாரிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, 'கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை' என்பது தான் விவசாயிகளின் குமுறலாக இருக்கிறது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூற்றுப்படி, “காய்ச்சல்” வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை இன்று பார்வையிட்டேன்! கமிஷனும் - ஊழலும் நிறைந்து, இன்றைக்கு “கோமா” நிலையில் இருந்துவரும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு இதனை சரிசெய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்!" என பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, 'மனிதர்களுக்கு திடீரென நோய் ஏற்படுவது போலத்தான், முக்கொம்பு அணை உடைந்துள்ளது' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP