நன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்தேன்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்

சென்னை - யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை பாராட்ட வேண்டிய ஒன்று என்பதால் அதற்கு நன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்ததாக இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் தெரிவித்துள்ளார்.
 | 

நன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்தேன்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்

சென்னை - யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை பாராட்ட வேண்டிய ஒன்று என்பதால் அதற்கு நன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்ததாக இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ' 41 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் - சென்னை இடையே விமான போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது. இது தமிழகத்திற்கு மட்டுமின்றி உலக அளவில் நாங்கள் ஏற்படுத்தியுள்ள புதிய உறவின் ஆரம்பம். தேர்தலில் ஆதரவு கேட்க வரவில்லை. விமான சேவை பாராட்ட வேண்டியது என்பதால் அதற்கு நன்றி சொல்லவே ஸ்டாலினை சந்தித்தேன். இலங்கை தமிழர்கள் முழு உரிமையுடன் வாழ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய நாங்கள் தயார். உரிமையை யார் பாதுகாப்பார்களோ அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் வாக்களிப்பார்கள்" என தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP