நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா

நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது என நித்யானந்தா காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார்.
 | 

நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது..  நித்தியானந்தா

நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது என நித்யானந்தா காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். 

ஆன்மீகவாதியாக தன்னை பிரபல படுத்த நினைக்கும் நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பாலியல் புகார் என பல குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் உள்ளன. குஜராத்தில் இருந்த நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டு, ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதனை தனி நாடாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் நித்தியானந்தா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

போலீசாரின் கைகளில் சிக்காத நித்யானந்தா, அவ்வபோது, இணையதளம் வாயிலாக அவரது சீஷர்களுக்கு பிரசங்கம் என்ற பேரில் காமெடியாக எதாவது பேசி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தற்போது வெளியிட்டுள்ள பிரசங்க வீடியோ ஒன்றில், திருவனந்தபுர நித்தியானந்தா பீடத்தின் ஆதினமாக ருத்திர கன்னியான பக்தி பிரியானந்தாவை நியமித்துள்ளதாகவும், நான் இல்லை என்றாலும் என்னுடைய ஆசிரமங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. மானம், அவமானத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என கூறியுள்ளார். ஏற்கனவே காவல்துறையினர் நித்தியானந்தாவை தேடுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுபோன்ற பேச்சுக்கள் காவல்துறையினர் கையில் நித்யானந்தா அகப்படும் போது என்னவாகும் என்பது தெரியவில்லை. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP