'இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன்' - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கமான பேச்சு!

'என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்' என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக பேசியுள்ளார். நாளை அவர் பணி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
 | 

'இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன்' - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கமான பேச்சு!

'இளைஞர்களை நம்பிஎன் பணியை விட்டுச் செல்கிறேன்' என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக பேசியுள்ளார். நாளை அவர் பணி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் என்றாலே தமிழக மக்கள் அனைவருக்கும் பரீட்சையமானவர். இவரது பேச்சும் சரி, நடவடிக்கையும் சரி அதிரடி தான். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன தஞ்சை கோவிலுக்கு சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் உலோக மாதேவி சிலைகளை மீட்டுக்கொண்டு வந்த அனைத்து மக்களின் மனதிலும் இடம் பிடித்தார். அவரது இந்த வீர தீர செயலுக்கு தமிழக அரசு உள்பட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். சிலைகள் மீட்கப்பட்டதையடுத்து, அதனை தஞ்சை மக்கள் பெரும் விழாவாகவும் கொண்டாடினர். 

மேலும், அவரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து ரயில்வே ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டபோது, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், நீதிமன்றம் அவரிடமே வழக்குகளை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதன்படி தான் அவர் சிலைகடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தார். 

'இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன்' - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கமான பேச்சு!

இந்நிலையில் இவர் நாளை பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன. ஆனால் தமிழக அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க இருப்பதாக தெரியவில்லை. 

தற்போது பொன்.மாணிக்கவேல் நாளை ஓய்வு பெற இருப்பதையொட்டி, இன்று சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் அவருக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் காவலர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "ஒரு குற்றம் நடந்தால் அந்தப் பகுதியில் இறங்கி முழுமையாக விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கைது செய்ய வேண்டும். உடனடியாக கைது செய்யக் கூடிய சட்டங்களை அறிந்து காவலர்கள் செயல்பட வேண்டும். யார் மீதும் தவறு இருந்தாலும் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். அவர்கள் மீது அறிக்கையை பதிவு செய்ய காவலர்கள் பயப்படக்கூடாது. 

'இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன்' - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கமான பேச்சு!

கைது செய்த குற்றவாளிகளை அடிப்பதால் அவர்களிடமிருந்து ஒருபோதும் உண்மையை வரவழைக்க முடியாது. குற்றவாளிகளை அவர்களுக்கேற்ப கையாண்டு உண்மையை பெற வேண்டும். நான் கையாண்ட ஒரு வழக்கில் குற்றவாளியை அழைத்து எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதேபோல் இருக்கையை அவனுக்கும் கொடுத்து, எனக்கு அளித்த உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அவனுக்கும் செய்து கொடுத்தேன். பிறகு, அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி, இதனால் பிற்காலத்தில் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விளக்கி அவனுக்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் அளித்தேன். இதையடுத்து, அவனே தானாக வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

எனவே காவலர்கள் நினைத்தால் 6 மாதத்தில் ஒரு குற்றவாளியை திருத்த முடியும். போலீசாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பி விட்டுச் செல்கிறேன் ’ என உருக்கமாகப் பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP