மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை அடித்துக்கொன்ற கணவர்...

மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை அடித்துக்கொன்ற கணவர்...
 | 

மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை அடித்துக்கொன்ற கணவர்...

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமர், தனது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராமரின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது உறவினரான கலியமூர்த்தியின் மனைவி கனகாவிற்கு ராமர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை அடித்துக்கொன்ற கணவர்...இது குறித்து ராமரை, கலியமூர்த்தி மிரட்டியும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, தமது மனைவி கனகா மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP