Logo

50கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

50கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக  நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல்பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்"

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP