ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று: பாதிக்கப்பட்ட 3வது பெண்! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

சாத்தூர், சென்னையைத் தொடர்ந்து மூன்றாவதாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 14 வயது சிறுமி எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று: பாதிக்கப்பட்ட 3வது பெண்! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் மூன்றாவதாக ஒரு பெண் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மூக்கில் ரத்தம் வடிந்த காரணத்தினால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு 2009 செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு பிறகு அவரது உடலில் புண்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனை சென்று சோதித்து பார்க்கையில் அவரது ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும் தற்போது அவருக்கு தீராத மாதவிடாய் போக்கு இருப்பதாகவும், அதற்கும்  எச்.ஐ.வி தொற்றுக்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதனால் அவரது கல்வியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள், அக்கம் பக்கத்தினரும் தன்னை ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

தனியார் மருத்துவமனையின் அலட்சிய போக்கே இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். 

எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு கர்ப்பிணி பெண்! அதிர்ச்சி தகவல்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP