நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை அடுத்து செவ்வாய் கிழமையன்று நிர்மலாதேவி வெளியே வருவார்.
 | 

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

 

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்து  வழக்கில் கைது செய்யப்பட்டு  11 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்நிலையில் நிர்மலா தேவியின் வழக்கு , நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. 

விசாரணைக்கு பின்னர்; வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஊடகங்களுக்கோ , தனிநபருக்கோ பேட்டி அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி  நீதிபதி உத்தரவிட்டார்.
 
இது குறித்து பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் : தற்போது நிர்மலாதேவியின் ஜாமீன் ஆவணங்களை நீதிமன்ற நடைமுறையில் காண்பித்த பின், செவ்வாய் கிழமையன்று ஜாமீனில் நிர்மலாதேவி வெளியே வருவார் என்ற தகவலை  தெரிவித்துள்ளார்.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP