Logo

பைக்கில்  பின்னால் உட்காருபவர்க்கும் ஹெல்மெட் கட்டாயம்: எச்சரிக்கும் தமிழக அரசு 

பைக்கில் செல்லும் போது ஓட்டுனரும், பின்னால் இருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

மோட்டார் வாகன சட்டப்படி  இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் அதே சமயம் நான்கு சக்கர  வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது.  இந்த விதியை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருந்த நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.  

இதனை தொடர்ந்து, "இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்" என்று தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP